LBRY Block Explorer

LBRY Claims • மன-அழுத்தம்-lock

47e2cf6ab4a2aea192e35ed48cf8bbd5805206a6

Published By
Created On
28 Mar 2023 13:39:25 UTC
Transaction ID
Cost
Safe for Work
Free
Yes
மன அழுத்தம் | Lock-down Stress | How to Reduce Stress, Anxiety and Depression at Home
மன அழுத்தத்தைத் தவிர்க்க 8 ஆலோசனைகள்..! மேலும் படியுங்கள்

``உலகளவில் ஏற்படும் நோய்களில் மன அழுத்தம்தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் பலரும் இதை ஒரு நோய் என்றே உணருவதில்லை. மன அழுத்தம் என்பது ஒரு தீவிரமான மனநோய். இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி, மனநல மருத்துவரைச் சந்தித்து, சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான். கொஞ்சம் முயற்சி செய்தால் மன அழுத்தம் ஏற்படுவதை எளிதாகத் தவிர்த்துவிடலாம்’’ என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

1. வாழ்க்கையில் பிரச்னைகளே வரக் கூடாது என்று எண்ணாதீர்கள். அது வரத்தான் செய்யும். பிரச்னையில்லாமல் வாழ்க்கை இல்லை. ஆகவே, அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றித் திட்டமிடுங்கள்.

2. இன்று, இண்டஸ்ட்ரியல் லைப்ஸ்டைலுக்குள் (Industrial lifestyle)வந்துவிட்டோம். எனவே, நெருக்கடிகளிலிருந்து தப்பமுடியாது. வேலைநிமித்தமான அழுத்தம் என்பது இருக்கவேசெய்யும். ஆனால், அலுவலகத்திலிருந்து வெளியே வந்துவிட்டால், நம்முடைய பிரச்னைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும். வீட்டுக்கு வந்தும், அலுவலக வேலைகளைத் தொடரக் கூடாது. கூடுமானவரை இதைத் தவிர்க்கவேண்டும். வீடு என்பது வாழ்வதுக்குத்தான்!

3. தினசரி எட்டு மணி நேர உறக்கம் என்பது அவசியம். அப்போதுதான், அடுத்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளவும் வேலைகளில் கவனம் செலுத்தவும் முடியும்.

4.தற்போது, மனநலத்துறையில் `ஃபுட் ஹாபிட்ஸ் ஃபார் மென்டல் ஹெல்த்’ என்ற தலைப்பில், பெரிய விவாதமே நடந்துகொண்டிருக்கிறது. அதாவது, நாம் சாப்பிடும் உணவு எப்படியிருக்கிறது... அந்த உணவுகளால் நம்முடைய மனநிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றியெல்லாம் மனநல மருத்துவர்கள் விவாதித்து வருகின்றனர். எனவே, உணவுப்பழக்கம் முக்கியமான ஒன்று. ஒரேசமயத்தில் வயிறுமுட்ட சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை அறவே தவிர்க்கலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியமானது.

5. வாழ்க்கையில், நாம் நினைக்கிற மாதிரிதான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அது சாத்தியமில்லை. எதிர்மறை குணங்கள் கொண்டவர்களிடம் பழக வேண்டிய சூழல் ஏற்படும். அவர்களைப் புரிந்துகொள்ளவும் ஏற்கவும் பழகவேண்டும்.

6. ஆக்கபூர்வமான செயல்களுக்கான நேரத்துக்கு முக்கியத்துவம் தரவும். பொழுதுபோக்கு விஷயங்களுக்கு முன்னுரிமை தருவதைத் தவிர்க்கவேண்டும். நேர மேலாண்மையில் கவனம் செலுத்தலாம். வாழ்க்கைக்கு எது அவசியமானது என்பது பற்றி யோசிக்கலாம். விருப்பத்துக்கும் தேவைக்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு, அதன்படி செயல்படுவது நலம் தரும். தேவைகள் நிறைவேறிய பின்னரே, விருப்பத்தை நோக்கி நகரவேண்டும்.

7. உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த இடத்தில் எப்படியான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என
...
https://www.youtube.com/watch?v=O5Gsj3JGcCQ
Author
Content Type
Unspecified
video/mp4
Language
Open in LBRY

More from the publisher

Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO
#CREA
Controlling
VIDEO
#GPMU
Controlling
VIDEO
Controlling
VIDEO
??
Controlling
VIDEO